●மண்ணின் வளத்தைப் பாதுகாக்க, கரிமச்சத்தின் அளவை அதிகரிப்பதும் நிலை நிறுத்துவதும் மிக அவசியம்.
●பசுந்தாள் உரப்பயிர்களான கொளிஞ்சி, சணப்பு, தக்கைப்பூண்டு, நரிப்பயறு மற்றும் தட்டைப்பயறு ஆகியவற்றைப் பயிரிடும்போது கரிமச் சத்தின் அளவை அதிகரிக்கவும், களைகளை குறைக்கவும் மற்றும் மண்ணரிப்பைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது என்பதை நாம் அறிவோம்.
●பசுந்தாள் உரப்பயிர்களை இயற்கை உரமாக பயன்படுத்தும்போது அவை மண்ணிலிருக்கும் பெரும்பாலான நோய்க் காரணிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
●குறிப்பாக வேர் வாடல் மற்றும் வேர் அழுகல் நோய்களை உண்டாக்கிடும் பூஞ்சைகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்திருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
●பசுந்தாளுரப்பயிர்கள் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளான ட்ரைக்கோடெர்மா, சூடோமோனாஸ், பேசில்லஸ் போன்றவற்றை ஊக்குவித்து பயிர் நோய்களின் தாக்கத்தினை குறைத்திருப்பதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன.
●பசுந்தாள் உரப்பயிர்கள் பயிர்களில் நோய்களை தோற்றுவிக்கும் நோய்க்காரணிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதிலும், நோய்வித்துக்கள் முளைப்பதைக் குறைப்பதிலும், முளைக்கப்பட்ட நோய்க்காரணிகளின் வித்துக்களை செயல் இழக்கச் செய்வதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.
●மேற்கண்ட பசுந்தாள் உரப்பயிர்களை விவசாய பெருமக்கள் பயிரிட்டு மண்வளத்தை மேம்படுத்தி மறைமுகமாக நோய்க்காரணிகளைக் கட்டுபடுத்தி மகசூலையும் அதிகரிக்கலாம் என்று சேலம் மாவட்டம், வீரபாண்டி, வேளாண்மை உதவி இயக்குநர் இரா.கிரிஜா மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கே.ராஜேந்திரன் ஒரு அறிக்கையில் கேட்டு கொண்டுள்ளார்.
More Stories
E-PAPER – 28/06/2023