என்ன மாட்டுசாணத்திலிருந்து பெயிண்ட் தயாரிக்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
அந்த காலத்தில் கிராமப்புற பகுதியில் மண்வீடுகளில், மாட்டுசாணத்தை தரையில் மெழுகி வருவார்கள். இந்த முறை ஒரு கிருமி நாசனியும் கூட. அப்படியே தினமும் அதிகாலையில் சாணக்கரைசல் தெளித்து வாசல் மற்றும் சுற்றுப்புற பகுதியை தூய்மையாக வைக்க பயன்படுத்தினார்கள். அப்படிபட்ட பசுவின் சாணத்திலிருந்து தற்போது காதி வாரியம் KVIC முயற்சி செய்து வெற்றியும் அடைந்து விட்டது. அந்த பெயிண்ட்ற்கு பிரக்கரிதி வேதிக் பெயிண்ட் என பெயரிடப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன.
ஒரு பசு மாடு இருந்தால் 30 எக்கரில் விவசாயம் செய்ய எரு தேவையில்லை என்கிறார் பிரபல இயற்கை விவசாயி விஞ்ஞானியான சுபாஷ் பாலேக்கர். அப்படிப்பட்ட மாட்டுசாணம் இன்று விலை பொருளாக மாறிவிட்டது. விவசாயிகளிடம் பெயிண்ட் தயாரிக்க சாண கொள்முதல் நடைபெற்று வருவதால் விவசாயிகளுக்கு கூடுதலாக வருமானம் வர வாய்ப்புள்ளது.
எப்படி என்ன?
மத்திய அரசின் ஆம்நிர்பர் பாரத் திட்டத்தை வலுப்படுத்த நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் அடுத்த 6 மாதங்களுக்கு 500 உற்பத்தி இலக்கு (PRODUCTION UNIT) அமைக்க காதி வாரியம் (KVIC) திட்டமிட்டுள்ளது.
பசுவின் சாணத்தினால் தயாரிக்கபஙபட்ட பெயிண்ட் பொருட்களுக்கு இந்திய தர நிலைகளின் பணியகம் சான்று (CERTIFICATE) அளித்துள்ளது. மாட்டு சாணம் வண்ண பூச்சு (COW DUNG PAINT) பாக்டிரியா போன்ற கிருமிகள், பூச்சிகள் மற்றும் கொசுக்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. மாட்டு சாணம் வண்ண பூச்சு என்பது ஒரு ஆக்கப்பூர்வமான சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் ஒரு மலிவான செலவில் பூசக்கூடிய பெயிண்ட்டாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
மாட்டு சாணம் இன்று மதிப்புள்ள மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
தக்காளியைத் தாக்கும் புள்ளிவாடல் நோய்
விதைகளை பரிசோதனை செய்து தரத்தினை உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்
கத்தரியில் சிற்றிலை நோய் தாக்குதல் மற்றும் மேலாண்மை