மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் இயந்திரங்களின் பயன்பாடு
மதுரை, ஜூலை 19
மதுரை மாவட்டம், சேடபட்டி வட்டாரத்தில், பேரையம்பட்டி பஞ்சாயித்துக்கு உட்பட்ட நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் இயந்திரங்களின் பங்கு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைப்பெற்றது. இய்பயிற்சியில் ஆடிப்பட்டத்தில் மானாவாரி விவசாயம் தொடங்கவுள்ளது. தற்போது பெய்யும் மழையைக் கொண்டு கோடை உழவு செய்திட விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இயற்கை வேளாண் பயிற்றுநர் பொ.வேலுசாமி பேசுகையில், ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யப்பட உள்ள நிலக்கடலை சாகுபடி இயற்கை விவசாயத்தின் மூலம் சாகுபடி செய்ய விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதாவது பஞ்சகாவ்யம், மீன் கரைசல், இஞ்சி பூண்டு கரைசல், மோர் கரைசல் மற்றும் திரவ அசோஸ்பைரில்லம், ரைசோபியம் ஆகிய இயற்கை உரங்களை பயன்படுத்தி பூச்சி, நோய் தாக்குதலின்றி இயற்கை முறையில் அதிக மகசூல் பெற்றிடலாம். விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்திடஅதிக இலாபம் பெறலாம் எனவும் விரிவாக எடுத்துக்கூறினார்.
இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் இரா.இராமசாமி, பேசுகையில் மத்திய, மாநில திட்டங்கள் பற்றியும், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற விவசாயிகள் முன்வரவேண்டும். காரிப் பருவத்தில் பயிர் செய்யக்கூடிய பயிர்களுக்கு மஞ்சல் வண்ணஅட்டை, விளக்குபொறி, இனகவர்ச்சிபொறி பயன்படுத்துவுது பற்றி விரிவாக எடுத்த கூறினார்கள். இப்பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் பாண்டியன், பேசுகையில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றியும் கடப்பாறை சாந்துசட்டி மண்வெட்டி, கதிர் அறிவாள், ஸ்பிரேயர் மானிய விலையில் பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டது. மற்றும் நிலக்கடலை உடைக்கும் இயந்திரம், விதைப்புகருவி போன்றவை பற்றியும் விரிவாக எடுத்தக்கூறப்பட்டது. அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ச.கணேசராஜா பயிர்களுக்கு தேவையான பதினாறு வகை சத்துக்கள் குறித்தும் பூச்சி நோய்கள் பற்றியும் கட்டுபடுத்தும் முறைகள் பற்றியும் எடுத்தக்கூறினார். பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் சத்யா பிரித்திவிராஜன் செய்து இருந்தனர். வேளாண்மை உதவி அலுவலர் குமார் நன்றி கூறினார்.
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை