October 18, 2024

மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விவசாயிகள் பயிற்சி

சிவகங்கை, ஆக.6சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரம் வேளாண்மைத் துறையின் மூலம் அட்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான உள்மாவட்டஅ ளவிலான விவசாயிகள் பயிற்சி மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் 40 விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மானாமதுரையில் பயிற்சி அளிக்கப்பட்டது.இப்பயிற்சிக்கு மானாமதுரை வேளாண்மை உதவி இயக்குநர் ஜா.இரவிசங்கர் பயிற்சியினை தொடங்கி வைத்து வரவேற்புரை வழங்கினார். மேலநெட்டூர் கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் கால்நடை வளர்ப்பு மற்றும் ஊட்டச்சத்துமேலாண்மை பற்றிய தொழில்நுட்பகளை எடுத்துக்கூறினார். மானாமதுரை கால்நடை மருத்துவர் டாக்டர் விக்னேஷ் கால்நடைநோய்களுக்கான காரணங்கள் மற்றும் மேலாண்மை பற்றிய தொழில்நுட்பகளை எடுத்துக்கூறினார். மானாமதுரைவேளாண்மைஅலுவலர் த.கிருத்திகா நடப்பு நிதியாண்டில் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். மானாமதுரை துணை வேளாண்மை அலுவலர் நா.சப்பாணிமுத்து மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்கான உத்திகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடு களை உதவி வேளாண்மை அலுவலர் சி.சுமதி வட்டார தொழில்நுட்ப மேலாளர் க.அமிர்தலட்சுமி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் திவ்யா,வினோத்குமார் செய்திருந்தனர். உதவி வேளாண்மை அலுவலர் சே.அனுசுயாதேவி அனைவருக்கும் நன்றி கூறினார்.