November 22, 2024

மானாவாரி நில மேம்பாட்டு பயிற்சி

விருதுநகர், ஜூலை 19

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 2024-25 ஆம் நிதியாண்டின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண் விரிவாக்க மையத்தில் 18/7/2024 அன்று மானாவாரி நில மேம்பாடு ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள் பயிற்சி அச்சம் தவில் தான் வருவாய் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்சி ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் கு தனலட்சுமி, தலைமையில் நடைபெற்றது. பயிற்சியில் விவசாயிகளின் வரவேற்று நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் வேளாண்மை பயிர் சாகுபடியுடன் இணைந்து ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, அதற்கான தீவனப் பயிர் சாகுபடி, மண்புழு உரம் தயாரிப்பு, பழக்கன்றுகள் சாகுபடி, தேனி வளர்ப்பு போன்றவை கூடுதல் வருவாயை பெருக்க வழி வகுக்கிறது. வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல், பயறு, சிறுதானியம், தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையை தடுக்க நுண்ணூட்ட உரம் மானியத்தில் உள்ளது. விவசாயிகள் சாகுபடி செய்யும் அனைத்து பயிர்களை தரமான விதைகளை தேர்வு செய்து விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்கும் தொழில்நுட்பம் பற்றி வேளாண்மை உதவி இயக்குனர் தனலட்சுமி விரிவாக எடுத்துரைத்தார்.

அச்சம் தவில்தான் பகுதி கால்நடை மருத்துவர் கோமதி, நடப்பாண்டில் செயல்படுத்த இருக்கும் மானிய திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து துணை வேளாண்மை அலுவலர் அம்மையப்பன், ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் சரவணன், விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வழங்க இருக்கும் மானிய விவரங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். விவசாயிகளுக்கு இழந்த சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டது. தொடர்ந்து ஜோதி மஞ்சுளா, விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பயிற்சி பட்டறிவு பயணம் செயல் விளக்கத்தில் அதன் மானிய விபரங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்து விவசாயிகளுக்கு நன்றியுரை கூறினார். இப்பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை சரவணன், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் மாரிமுத்து, உதவி தொழில்நுட்ப மேலாளர் ஏற்பாடு செய்திருந்தார்.