பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழங்களின் விளைச்சல் ஏப்ரல் – மே மாதங்களில் தொடங்கி ஜூலை வரை நீடிக்கும். பீகார், கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்களில் மாம்பழம் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. அங்கு விளைவிக்கப்படும் மாம்பழ வகைகள் குறித்தும் அவற்றின் சுவை தன்மை பற்றிய பார்ப்போம்.
1) அல்போன்சா
ஹபஸ் என்றும் அழைக்கப்படும் அல்போன்சா, மாம்பழங்களின் ராஜாவாக கருதப்படுகிறது. தித்திக்கும் சுவையையும், கீரிம் போன்ற தன்மையையும் கொண்டிருக்கும். மிருதுவாகவும், தங்கம் மஞ்சள் நிற தோலுடனும் காட்சி அளிக்கும். மராட்டிய மாநிலத்தில் ரத்ன கிரி மற்றும் தேவ்கட் பகுதிகளில் அல்போன்சா மாம்பழங்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன.
2) பங்கனப்பள்ளி
பெனிஷன் என்றும் அழைக்கப்படும் பங்கனப்பள்ளி மாம்பழங்கள் ஆந்திராவில் அதிகமாக விளைகின்றன. நீள் வட்ட வடிவம் மற்றும் மெல்லிய மஞ்சள் தோலை கொண்டிருக்கும். பங்கனப்பள்ளி மாம்பழங்கள் இனிப்புடன் சற்றே புளிப்பு சுவை கொண்டவை. இதனை சுவைப்பதோடு சமையலுக்கும் பயன்படுத்தலாம்.
3) நீலம்
இந்த மாம்பழம் வெளிர் மஞ்சள் நிறத்தில் காட்சி தரும். தித்திப்பாக இனிப்பு சுவை கொண்டதாக ஜூஸ் பிழிவதற்காக ஏதுவான சதைபற்றுடன் காணப்படும். இது பலரும் விரும்பி சுவைக்கும் மாம்பழமாக ரகமாக இருக்கும்.
4) கேசரி
குங்குமப்பூ போன்ற நறுமணமும் இனிப்பும், புளிப்பும் கொண்ட சுவையும் கொண்டது. வெளிர் மஞ்சள், பச்சை நிற தோலுடன் நார்சத்துடன் கூடிய சதைப்பகுதியுடனும் காணப்படும். இந்த கேசர் மாம்பழங்கள் குஜராத் பகுதியில் அதிகமாக விளைகின்றன.
5) தோதாபுரி
இவை நீள்வாக்கிலும், வளைந்தும் கிளியின் போன்ற தோற்றத்திலும் காட்சி அளிக்கும். இவை நமக்கு பரீட்சயமான “கிளிமூக்கு மாங்காய்” போன்ற காட்சியளித்தாலும் சற்று கசப்பான சுவை கொண்டவை. அதனால் ஊறுகாய், சட்னி மற்றும் பழச்சாறுகள் தயாரிக்க பயன்படுத்த படுகின்றன.
6) லாங்க்ரா
இவை இனிப்பு சுவையையும், சிட்ரஸ் பழங்களில் உள்ள புளிப்பு சுவையையும் ஒஓரு சேர கொண்டிருக்கும்.
பச்சை மஞ்சள் நிறத்தில் பழங்கள் இருக்கும். நார்சத்தும் மிகுதியாக கொண்டிருக்கும். இந்த மாமரங்கள் இந்தியாவின் வட பகுதியில் அதிகமாக உள்ளது.
7) ஹிம் சாகர்
இது தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் கொண்டவை. மென்மை மற்றும் சதைப்பற்றுள்ள கூழ் போன்ற தன்மையையும், பச்சை மஞ்சள் நிற தோலையும் கொண்டிருக்கும்.
ஹிம்சாகர் மாம்பழங்கள் சுவை மற்றும் வாசனையின் அடிப்படையில் சிறந்த மாம்பழ வகைகளில் ஒன்றாக கருதப்படுகின்றன. இது மேற்கு வங்காளத்தில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
8) ராஜ புரி
இந்த மாம்பழங்களில் அடர்த்தியான தோல் மற்றும் மங்கலான மஞ்சள் நிறத்துடன் காட்சி அளிக்கும். அதன் அளவும் பெரியதாக இருக்கும். இனிப்பு மற்றும் சற்று கசப்பான சுவை கொண்டிருக்கும். சமையலுக்கு இதனை பயன்படுத்தலாம். மராட்டியத்தில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
9) தாஷேரி
இந்த வகை மாம்பழங்கள் மணம் மற்றும் இனிப்பு சுவைக்கு புகழ்பெற்றது. மஞ்சள் நிற தோலுடன் ஜூஸ் தயாரிக்க ஏற்றது. உத்தரபிரதேச பகுதியில் அதிகமாக பயிரிடப்படுகிறது.
10) நூர்ஜஹான்
இந்த மாம்பழம் ஒன்றின் விலை 2000. இந்த மாம்பழத்தின் விலை இந்த அளவுக்கு அதிகமாக இருப்பதற்கு அதன் அளவும் ஒரு காரணமாகும். ஒரு பழத்தின் எடை அதிகபட்சமாக 5 கிலோ வரை இருக்கும். இது அரிதான வகை மாம்பழம் கூட. இது குஜராத எல்லையிலுள்ள கத்தி வாடா என்ற இடத்தில் மட்டும் விளைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாம்பழம் சீசன் முடியும் தறுவாயில் பத்து வகையான மாம்பழங்களின் தன்மையும் அதனுடைய தித்திப்பான சுவையின் தன்மையும் விரிவாக பார்த்தோம். இந்த காலத்துல மட்டும் தான் முக்கனிகளை ஒரே நேரத்துல உட்கொள்ள முடியும். அந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தித்திப்பான கனிகளை உட்கொண்டு திகட்டாத வாழ்வு வாழுவோம் .
அக்ரி சு.சந்திர சேகரன் வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை. 9443570289
More Stories
தக்காளியைத் தாக்கும் புள்ளிவாடல் நோய்
விதைகளை பரிசோதனை செய்து தரத்தினை உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்
கத்தரியில் சிற்றிலை நோய் தாக்குதல் மற்றும் மேலாண்மை