October 18, 2024

விதைகளை பரிசோதனை செய்து தரத்தினை உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

வித்தின்றி விளைச்சல் இல்லை” என்பதற்கேற்ப நம் வேளாண்மையில் நிறைந்த மகசூல் பெறத் தேவையான இடுப்பொருட்களில் விதை மிகவும்

முதன்மையானதும் ஆகும். விவசாயப் பெரு மக்களுக்கு தரமான விதைகள் சென்றடைவதையும், தரமற்ற விதைகள் சென்றடைய விடாமல் தடுப்பதையும்

தலையாய குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது விதைப்பரிசோதனை நிலையம் ஆகும்.

இவ்விதைப்பரிசோதனை நிலையத்திற்கு விதைச்சான்றுஉதவி இயக்குநரிடமிருந்து சான்றிப்பு விதை மாதிரிகள், விதை ஆய்வுத் துணை இயக்குநரிடமிருந்து

ஆய்வாளர் விதைமாதிரிகள் மற்றும் விவசாயிகள், விதை விற்பனையாளர்களிடமிருந்து பணி விதை மாதிரிகள் என மூன்று வகையான விதை மாதிரிகள்

பெறப்பட்டுவிதைப் பரிசோதனை முடிவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விதைப்பரிசோதனை நிலையத்தில் பெறப்படும் விதை மாதிரிகள் முளைப்புத்திறன், ஈரப்பதம், சுத்தத் தன்மை, இனத்துாய்மை பூச்சித்தாக்குதல் போன்ற

பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு முடிவுகள் உரிய கால அவகாசத்தில் றீPசிளீறீ என்ற இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

முளைப்புத்திறன் மக்காச்சோளத்திற்கு 90 சதம், நெல், எள், கொள்ளுக்கு 80 சதம், பயறு வகைகள், சிறுதானியங்கள், வீரிய ஒட்டுப் பருத்திக்கு 75 சதம்,

எண்ணெய் வித்துப் பயிர்கள் 70 சதம், பருத்தி (ரகம்). வெண்டைக்கு 65 சதம், கொடி வகைக் காய்கறிகளுக்கு 60 சதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் விதை சேமிப்பு காலத்தை தீர்மானிப்பதில் விதையின் ஈரப்பதம் முக்கியமான பங்காற்றுகிறது. ஈரப்பதத்தைப் பொறுத்த மட்டில் நெல் 13% கம்பு,

சோளம், ராகி, மக்காச்சோளம் சிறுதானியங்கள் 12% பருத்தி, வெண்டை 10% பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் 9% கத்தரி, தக்காளி, மிளகாய், கீரைகள்

8% கொடி வகைக்காய்கறிகள் 7% என நிர்ணம் செய்யப்படுள்ளது.

சுத்த தன்மையை பெரும்பாலான பயிர் வகைகளுக்கு 98% இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. “வீரியம் கெட்டால் காரியம் கெட்டுப்போகும்”

என்பதற்கேற்ப நல்ல வீரியமுள்ள விதைகளை தேர்வு செய்வது வீரியமுள்ள நாற்றுக்களை அளிப்பதுடன், தரமான விதை உற்பத்திக்கும் வழிவகுக்கும்.

வீரியமான நாற்றுகளை நடுவதால் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் நடவு வயலில் இடக்கூடிய உரங்களையும் நல்லமுறையில் எடுத்துக்

கொள்ளும்.

எனவே, விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் தங்களிடமுள்ள விதைகளை பரிசோதனை செய்து தரத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள

தங்களிடமுள்ள விதைக் குவியலில் இருந்து விதை மாதிரிகளை எடுத்து, விதைப்பரிசோதனைக் கட்டணமாக மாதிரி ஒன்றுக்கு ரூ.80/- வீதம் செலுத்தி

மதுரை, நாகமலை புதுக்கோட்டை யில் இயங்கி வரும் விதைப்பரிசோதனை நிலையத்தில் கொடுத்து பகுப்பாய்வு செய்து பயன் பெறுமாறு

விதைப்பரிசோதனை அலுவலர் ம.மகாலட்சுமி மற்றும் வேளாண்மை அலுவலர்கள் சி.கமலாராணி பெரி.இராமலட்சுமி ஆகியோர் கேட்டுக்கொள்கின்றனர்.