October 18, 2024

விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் சூலூர் வட்டாரத்தில் சோளம் விதைப்பண்ணையில் ஆய்வு

கோவை, ஜூலை 5

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் சோமனூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட மு-12 விதைப்பணையினை கோவை விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் மாரிமுத்து, விதைச்சான்று அலுவலர், ஹேமலதா மற்றும் உதவி விதை அலுவலர் பெரியகருப்பன் ஆகியோருடன ஆய்வு செய்தார். அப்பொழுது அவர் கூறுகையில், நமது உணவு கலாச்சாரத்தில் சிறுதானிய உணவுகளக்கு என்றைக்குமே முக்கிய பங்கு உள்ளது. இதில் சோளம் சார்ந்த பாரம்பரிய உணவுகளான சாதம், களி, ரொட்டி போன்றவையோடு தற்காலத்தில் குழந்தைகளின் விருப்ப உணவுகளான நூடுல்ஸ் கடயமநள பிஸ்கட்ஸ் ஆகியவற்றையும் சிறுதானியத்தில் செய்து இன்றைய தாய்மார்கள் அசத்தி வருகின்றனர். எனவே, அதற்கேற்ற சோள இரக பயிர்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படுகிறது. இத்தகைய இரகங்களை வேளாண்மைத்துறை மூலமாக மானிய விலையில் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி, விதை உற்பத்தியாளர்களாக்கி விதை உற்பத்தியினை அதிகரிக்க விதைச்சான்றுத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சோளத்தில் மு-12 என்ற இரகம் 2015ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 95-100 நாட்களுக்குள் அறுவடை செய்யக்கூடிய குறைந்த வயதுடைய இரகம். மேலும் குளிர்கால மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற இரகமாகும். இரட்டிப்பு பயன் தரக்கூடியது. விவசாயிகளின் தீவன தேவை மற்றும் தானியத் தேவையினை சரிவிகிதத்தில் பூர்த்தி செய்யும் இரகமாக மு-12 விளங்குகின்றது. இதன் சராசரி தானிய மகசூல் மானாவரியில் எக்டருக்கு 3121 கிலோவும், இறவையில் 5801 கிலோ வரை கிடைக்கும். மேலும் தீவனத்தட்டு (உலர் தீவனம்) எக்டருக்கு சுமார் 12 மெட்ரிக் டன் வரை கிடைக்கும். இதன் தானிய மணிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். மேலும் தானியங்களில் உயர்தர புரோட்டின் அளவு 9.58 கால்சியம் 0.35 இரும்புச்சத்து 106.6 மி.கி.(மைக்ரோ கிராம்) உள்ளதால் மதிப்புக்கூட்டு உணவு உற்பத்திக்கு மிகவும் ஏற்ற ரகமாக விளங்குகிறது.

எனவே, விவசாயிகள் எதிர்வரும் புரட்டாசி-ஜப்பசி பட்டத்தில் இந்த இரகத்தினை பயிர் செய்வதால் நல்ல மகசூல் பெறலாம். விதைப்பண்ணை அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் இப்பட்டத்தினை பயன்படுத்தி விதைப்பண்ணைகளை அமைத்தால் விதைச் சான்றளிப்புத்துறை மூலம் தகுந்த வயலாய்வு பணிகளை மேற்கொண்டும், தரமான விதை உற்பத்தி செய்யும் வழிமுறைகளை வழங்கியும், விவசாயிகளுக்கு தேவையான தகவல்களும் அளித்து சிறந்த மகசூல் பெற்று அதிக வருமானம் பெற வழிவகை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.