October 18, 2024

விவசாய உணவு பொருட்களுக்கான ஏற்றுமதி பயிற்சி

விருதுநகர், ஜூலை 11

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டாரம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் 11.7.24 அன்று நடைபெற்ற பயிற்சியில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் த.வளர்மதி கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். உரையில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் மற்றும் வேளாண்மையில் அதிக லாபம் ஈட்டுதல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கு.தனலட்சுமி, தலைமை உரையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மாநிலத் திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும் மானியங்கள் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். கூட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறையின் சார்பாக கலந்து கொண்ட மகாலட்சுமி, வேளாண் இடுப்பொருட்களை மதிப்பு கூட்டுதல், வேளாண் இடுபொருட்களை இணையம் வழி விற்பனை செய்தல், வேளாண் இடுப்பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்தல், வேளாண் இடுபொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்தல், ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் நாராயணன் நன்றி உரை வழங்கினார்.