October 18, 2024

மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள்

சிவகங்கை, ஜூன் 25

   முதலமைச்சரின் "மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்" திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு  50 சதவித மானியத்தில் பசுந்தாள் உரவிதைகள் வழங்கப்படுகின்றன என  காளையார்கோவில்  வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இரத்தினகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ  பசுந்தாள் உர விதையான தக்கைப்பு+ண்டு (நெட்டி விதை) வழங்கப்பட்டு வருகின்றது எனவும் இந்த உரப் பயிர்களை  விவசாயிகள் பயிரிடுவதன் மூலம் மண்ணில் உயிர் கரிமச்சத்தையும், பயிர் மகசு+லையும் அதிகரிக்கும் எனக் கூறினார். மேலும் மண்ணை வளமாக்கும் மண்புழு உர உற்பத்தியை ஊக்குவிக்க ஒரு விவசாயிக்கு இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.  மேலும் மானாவாரி நிலங்களில் உற்பத்தியை ஊக்குவிக்க கோடை உழவுக்கு ஏக்கருக்கு பின்னேற்பு மானியமாக  ரூ.500,  விதை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.  வேப்பங்கன்றுகள் ஏக்கருக்கு 200 வீதம் அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு 1000 மரக்கன்றுகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. உயிர்ப்பு+ச்சிக் கொல்லி பண்புடைய தாவரங்களான ஆடாதொடா, நொச்சி  கன்றுகள் ஒரு விவசாயிக்கு 50 கன்றுகள் வீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.   விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை முதலமைச்சரின் "மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்"; திட்டத்தில் பயன் பெற  காளையார்கோவில்  வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும்  பாகனேரி  துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.