பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாகக் கருதப்படுகிறது. சராசரி ஆண்டு மழையளவு 861 மி.மீ பெறப்படுகிறது. மக்காச்சோளம் மற்றும் பருத்தி போன்ற பயிர்கள் மாவட்டத்தின் மொத்த பயிர் பரப்பளவில் 80 சதவீதம் இடம் பெறுகின்றன. மக்காசோளம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் வகிக்கிறது. நீர்த்தேவை குறைவு என்பதாலூம் அதிக மகசூல் திறன் கொண்ட பயிர் என்பதாலும் தானியங்களின் அரிசி என்று அழைக்கப்படுகிறது.
ஆடி மாதமும் விவசாயமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் மக்காசோளம் சாகுபடி அதிக அளவில் செய்யப்படும். கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காசோளம் சாகுபடி சுமார் 71 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தரமான மக்காசோள விதைகளை பயன்படுத்தினால் விவசாயிகள் அதிக விளைச்சலும், கூடுதல் வருமானமும் பெறலாம். மக்காசோளம் விதையின் முளைப்புத்திறன் 90 சதவீதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். விதைகள் நன்கு திரட்சியாகவும் பதர், பூச்சிகள் மற்றும் நோய் கிருமிகள் அற்று இருத்தல் அவசியம். மக்காசோளம் விதையின் குறைந்த பட்ச ஈரப்பதம் 12 சதவீதமாகவும், புறத்தூய்மை 98 சதவீதமாகவும் இருக்க வேண்டும்
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை