October 18, 2024

பயறு வகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் நீர் அழுத்த மேலாண்மை பயிற்சி

மதுரை, ஜூலை 9

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி வட்டாரம், வேளாண்மை துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பொட்டப்பட்டி கிராமத்தில் 9.7.24 அன்று கோடை பருவத்தில் பயறு வகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் நீர் அழுத்த மேலாண்மை குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் 40 விவசாயிகளுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் பொட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா தலைமையற்றார். வேளாண்மை அலுவலர் விக்னேஷ் குமார், முதலமைச்சரின் மண்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் பற்றியும், பாரதப் பிரதமரின் விவசாயிகளின் கவுரவ தொகை திட்டம் பற்றியும், நுண்ணீர் பாசன திட்டம் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். உதவி வேளாண் பொறியாளர் கண்ணன், பண்ணை குட்டை, சூரிய மின் மோட்டார் பம்புகள், போன்ற திட்டங்களை பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை கோடை பருவத்தில் பயறு வகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்வதற்கு தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்தும் முறை மற்றும் பயன்பாடுகள் குறித்தும் அரசு மானியத்தில் வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும் உழவன் செயலி பயன்பாடு குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் சுப்பிரமணி பொட்டபட்டி கிராம வேளாண் வளர்ச்சி குழு பற்றி விவசாயிகளுடைய உரையாடினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் சத்திய கீர்த்தனா நன்றியுரை கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உழவர் நண்பர் செல்வம் ஏற்பாடு செய்தார்.