October 18, 2024

பயறு வகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி

மதுரை, ஜூலை 9

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டாரம் வேளாண்மைத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் 9.7.24 அன்று ஒடைப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ‘பயறு வகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை” குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் கள்ளிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) எம்.கீதா கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். ஒய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குநர் பூவலிங்கம், பயறு வகைப்பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், திரவ உயிர் உரங்களின் பயன்பாடு நுண்ணூட்ட உரங்களின் பயன்பாடு குறித்தும் விவசாயிகளிடம் விரிவாக எடுத்துரைத்தார். கள்ளிக்குடி வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஆ.குமாரிலட்சுமி, வேளாண்மைத்துறையில் செயல்படும் மானியத்திட்டங்கள் பற்றி விளக்கினார். வேளாண் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் சங்கர் கணேஷ் வேளாண் விற்பனைத்துறையின் மானியத்திட்டங்கள் பற்றி விளக்கினார். இப்பகுதி உதவி வேளாண்மை அலுவலர் நாகமோகன், பயிர் காப்பீடு குறித்து விளக்கினார். பயிர் காப்பீடு பற்றிய துண்டு பிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அ.இந்திராதேவி நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் வே.யுவராஜ்குமரன் செய்திருந்தார்.