திண்டுக்கல், ஜூலை 11
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ் தருமத்துப்பட்டி கிராமத்தில் ஆர்ஏடி ஐஎப்எஸ் தொழில்நுட்ப விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் தலைமை வகித்தார். எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய முதுநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர் செல்வமுகிலன் விவசாயிகள் கூட்டு பண்ணைய முறையில் விவசாயம் செய்தல் மற்றும் ஆடு மாடு வளர்ப்பு மற்றும் இயற்கை முறையில் பண்ணையம் செய்வது பற்றி விளக்கி கூறினார். இப்பபிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன் வேளாண்மை துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி விவசாயிகள் அனைவரும் மண்பரிசோதனை செய்து அதன்படி உரமிட வலியுறுத்தினார். உதவி வேளாண்மை அலுவலர் ராஜி இப்பயிற்சியில் கலந்து கொண்டு விவசாயிகள் பயன் பெறுமாறு கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு அருண்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை