November 22, 2024

மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரமாக்கல் பயிற்சி

விருதுநகர், ஜூலை 13

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 2024-25 ஆம் நிதியாண்டு விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் பயிற்சி மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரமாக்கல் என்ற தலைப்பில் புலியூரான் கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் ரா.பத்மாவதி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையம் பண்ணை மேலாளர் ஜீவா, மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து தொழில் நுட்பவுரையாற்றினார். வேளாண்மை உதவி இயக்குநர் பத்மாவதி, நிலக்கடலை சாகுபடி பயிர் பாதுகாப்பு மற்றும் சிவப்பு கம்பளிபுழு கட்டுப்பாடு குறித்து எடுத்துரைத்தார். செண்டு, வேளாண்மை அலுவலர் உயிர் உரங்கள் பயன்பாடு மற்றும் நுண்ணூட்ட கலவை பயன்பாடுகள் குறித்து தொழில்நுட்பவுரையாற்றினார். உதவி வேளாண்மை அலுவலர் பெரியகருப்பன், வேளாண்துறை தொகுப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பெருமாள்சாமி, நிலக்கடலையில் விதை நேர்த்தி செய்யும் தொழில்நுட்பங்களை செயல்விளக்கமாக செய்து காண்பித்தார். மேலும் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சதீஸ்குமார் செய்திருந்தார்.