October 18, 2024

அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி

திருச்சி, ஜூலை 16

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டாரம் வேளாண்மைத் துறையின் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் மூலம் பிச்சாண்டார்கோயில் அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் அபிராமி வரவேற்புரை ஆற்றினார்.

மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) பரமசிவம் தலைமை வகித்து திட்ட விளக்க உரை ஆற்றினார்.
மேலும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விதை இருப்பு மற்றும் விதைப்பு முறைகளை பற்றி எடுத்துக் கூறினார்.

முன்னோடி விவசாயி லோகநாதன் பஞ்சகாவியா, மீன் அமில கரைசல், தேமோர் கரைசல், பூச்சி விரட்டி, பழக் கரைசல் தயாரிப்பு குறித்தும் அதை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் உரை ஆற்றினார்.

குறுவை சாகுபடி முறைகள் குறித்து துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி எடுத்துக் கூறினார்.

மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் நடப்பு பருவத்திற்கு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள விதைகள், நுண்ணூட்டச் சத்து கலவைகள் மற்றும் அதன் மானியங்கள் குறித்து உரை ஆற்றினார்.

இயற்கை விவசாயி ஸ்டீபன் கென்னடி அங்கக வேளாண்மை குறித்தும் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும் உரை ஆற்றினார்.

இறுதியில் உதவி தொழில் நுட்ப மேலாளர் சிந்தியா நன்றி உரை கூறினார்.