ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த பயிற்சி
மதுரை, ஜூலை 18
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் 18.7.24 அன்று வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) அமுதன் தலைமையில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் மு.மயில், மத்திய மாநில திட்டங்கள் பற்றியும் மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.712/-ஆகும். காப்பீடு செய்ய 31.7.24 கடைசி நாளாக உள்ளதால், அனைத்து விவசாயிகளையும் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு விடுத்து அனைவரையும் வரவேற்றார். மேலும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள இடுபொருட்கள் விவரங்கள் மற்றும் மானிய திட்டங்கள், அரசின் திட்டங்களை எடுத்துரைத்தனர்.
வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு சக்திகணேசன், வேளாண்மை அலுவலர், தரக்கட்டுப்பாடு முத்துலட்சுமி ஆகியோர் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரப்பயன்பாடு முக்கியத்துவம், சமச்சீர் உர பயன்பாடு மற்றும் உயிர் உரங்களின் பயன்கள் பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்களின் பயன்பாடுகள் அதனை தயாரிக்கும் முறை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் டாக்டர் ஆனந்தன், நெல் இரகங்களுக்கு எற்ப உரப்பயன்பாடு மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள் குறித்து எடுத்துரைத்தார். மண் பரிசோதனை ஆய்வகத்தின் வேளாண்மை அலுவலர் சூரியபிரபா, ஜோஸ்பின் நிர்மலா மற்றும் உரக்கட்டுபாடு ஆய்வகத்தின் வேளாண் அலுவலர் ஆமினம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு மண்வளம் மேம்பாடு, மண் பரிசோதனை மற்றும் மண் பரிசோதனை முக்கியத்துவம், சமச்சீர் உர மேலாண்மை ஆகியவற்றை எடுத்துரைத்தனர். மேலும் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் பாரம்பரிய நெல் வகைகள் பற்றிய கருத்து கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை விவசாயிகள் அனைவரும் பார்வையிட்டனர். மேலும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களது மண் மாதிரிகளை கொடுத்து உடனடி மண்பரிசோதனை முடிவுகள் பெற்றனர். இப்பயிற்சியில் வேளாண்மை அலுவலர் மு.வசந்தகுமார் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் மு.பாலாமணி, வேளாண் வணிக உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கும், தொழில்நுட்ப உரையாற்றிய விஞ்ஞானிகள் அலுவலர்களுக்கு உதவி வேளாண்மை அலுவலர் ப.பால்பாண்டி நன்றி கூறினார். பயிற்சியின் முடிவில் விவசாயிகளுக்கு தக்கைப்பூண்டு மற்றும் மண்வள அட்டை வழங்கப்பட்டது. மேலும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த விவசாயிகள் பேரணி நடைபெற்றது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் வேல்முருகன், வசந்தி மற்றும் சௌந்தராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை