November 22, 2024

அங்கக வேளாண்மை சாகுபடிக்கானச் சான்று பெறும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

அரியலூர், ஜுலை 26

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாரம் குழுமூர் வருவாய் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கும் அட்மாதிட்டம் மூலம் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி விவசாயிகள் அங்கக வேளாண்மை சாகுபடிக்கானச்சான்று பெறும் வழிமுறைகள் எனும் தலைப்பில் வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா அறிவுரையின் பேரில் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில் முதலாவதாக அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் அட்மா திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார். பின்னர் பேசிய வட்டார துணை வேளாண்மை அலுவலர் பாலுசாமி அங்கக வேளாண்முறையில் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்களான பஞ்சகாவ்யாஇ மீன்அமினோஅமிலம், ஜுவாமிர்த கரைசல் பற்றியும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை பயன்படுத்தும் முறை அதன் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார். அங்கக வேளாண் முறையில் சாகுபடி செய்து எவ்வாறு அங்கக வேளாண் சான்று பெறுவது என்பது பற்றி விரிவாக எடுத்து கூறினார் மற்றும் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலின் அறிகுறிகள் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது போன்ற தொழில்நுட்ப செய்திகளை எடுத்து கூறினார்.

அடுத்து பேசிய உதவி வேளாண்மை அலுவலர் ஆனந்தி முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களான பசுந்தாள் உர உற்பத்தி, மண்புழு உர உற்பத்தி மற்றும் பாரம்பரிய நெல் இரகங்கள் பற்றியும் செந்துறை வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள இடுபொருட்கள் அதன் மானிய விபரம் பற்றி எடுத்து கூறினார். இப்பயிற்சியின் நிறைவாக அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சிவா மற்றும் முருகன் நன்றியுரை கூறினார். இந்தபயிற்சியில் இளநிலை ஆராய்ச்சியாளர் சுகந்தி, முன்னோடி விவசாயி பூபதி மற்றும் குழுமூர் கிராமத்தை சேர்ந்ந ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்நதனர்.