December 22, 2024

கால்நடை வளர்ப்பில் தீவனப்பயிர்களின் முக்கியத்துவம் குறித்த இலவசப் பயிற்சி

கரூர், ஆக.6

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகில் பண்டுதகாரன்புதூரில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் கால்நடை வளர்ப்பில் தீவனப்பயிர்களின் முக்கியத்துவம் பற்றிய ஒரு நாள் உள்வளாக பயிற்சி 8.8.24 (வியாழக்கிழமை) அன்று இலவசமாக அளிக்கப்படவுள்ளது. விவசாயிகள் / கால்நடை பண்ணையாளர்கள் / கால்நடை தீவனப்பயிர் வளர்ப்பில் ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொண்டு தீவனப்பயிர் உற்பத்தி தொடர்பாக தங்களுக்கு உள்ள சந்தேகங்களுக்கு தெளிவு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பம் உள்ளவர்கள் 04324 294335 மற்றும் 73390 57073 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் கேட்டுக்கொள்கிறார். மேலும், இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் 8.8.24 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு பயிற்சி மைய வளாகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.