பவானி வட்டாரத்தில் வணிக முறையிலான நாட்டு இன பறவைகள் வளர்ப்பு பற்றி பயிற்சி
ஈரோடு, ஆக.9
ஈரோடு மாவட்டம், பவானி வட்டாரத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வணிக முறையிலான நாட்டு இன பறவைகள் வளர்ப்பு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி சன்னியாசிப்பட்டி கிராமத்தில் 8.8.24 அன்று நடைப்பெற்றது. ம.கனிமொழி, வேளாண்மை உதவி இயக்குநர் ,பவானி வேளாண்மை – உழவர்நலத்துறை திட்டங்கள் மற்றும் கரும்பு மற்றும் நெற் பயிர் சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினார். யுவராஜ், கால்நடை மருத்துவர் கோழி இனங்கள், கலப்பின கோழி மற்றும் நாட்டுகோழி வளர்ப்பு முறை, பராமரிப்பு முறை, தீவன முறை மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடு த்துரைக்கப்பட்டது. மேலும் கோழி அடை காக்கும் கருவி (ஐஐஉரடியவழச) மற்றும் தடுப்பூசி முறை குறித்து தெரிவித்தார். முருகேசன், விதை சுத்திகரிப்பு அலுவலர், நெற்பயிரில் சாகுபடி முறைகள் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து ஆலோசணை கூறினார். சித்தையன், உதவி வேளாண்மை அலுவலர், வேளாண்மை திட்டங்கள் குறித்து கூறினார். அக்ரி இன்சுரன்ஸ் கம்பெனி, ஈரோடு கார்த்திக், பயிர் காப்பீடு மற்றும் கால்நடைகளுக்கு காப்பீடு செய்வது குறித்து ஆலோசணை கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் லோ.கங்கா, உழவன் செயலி பதிவேற்றம், இ நாம் மற்றும் இ வாடகை குறித்து விவசாயிகளிடம் கூறினார். பூங்கோதை மற்றும் மணிகண்டன் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நன்றியுரை கூறினார்.
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை