நோய் மேலாண்மையில் பசுந்தாள் உரப்பயிர்களின் பங்கு

●மண்ணின் வளத்தைப் பாதுகாக்க, கரிமச்சத்தின் அளவை அதிகரிப்பதும் நிலை நிறுத்துவதும் மிக அவசியம்.●பசுந்தாள் உரப்பயிர்களான கொளிஞ்சி, சணப்பு, தக்கைப்பூண்டு, நரிப்பயறு மற்றும் தட்டைப்பயறு ஆகியவற்றைப் பயிரிடும்போது கரிமச் சத்தின் அளவை அதிகரிக்கவும், களைகளை குறைக்கவும் மற்றும் மண்ணரிப்பைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது என்பதை நாம் அறிவோம்.●பசுந்தாள் உரப்பயிர்களை இயற்கை உரமாக பயன்படுத்தும்போது அவை மண்ணிலிருக்கும் பெரும்பாலான நோய்க் காரணிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.●குறிப்பாக வேர் வாடல் மற்றும் வேர் அழுகல் நோய்களை உண்டாக்கிடும் பூஞ்சைகளின் எண்ணிக்கையை […]
நாமக்கல் மாவட்டத்தில் பயிர் நோய் மேலாண்மையில் பசுந்தாள் உரப்பயிர்களின் பங்கு
நாமக்கல் மாவட்டம், வேளாண்மைத்துறையின் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கவிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் மாவட்டத்தில் பசுந்தாள் உரப்பயிர்களான கொளிஞ்சி, சணப்பை, தக்கைப்பூண்டு, நரிப்பயறு, ஆகியவற்றை இயற்கை உரமாக பயன்படுத்தும் போது அவை மண்ணின் வளத்தைப் பாதுகாக்க, கரிமச்சத்தின் அளவை அதிகரிப்பதும் நிலை நிறுத்துவதும் மிக அவசியம். களைகளை குறைக்கவும், மண்ணிலும் பயிர்களிலும் நோய்களை தோற்றுவிக்கும் நோய் வித்துக்கள் முளைப்பதைக் குறைப்பதிலும், முளைக்கப்பட்ட நோய்க்காரணிகளின் வித்துக்களை செயல் இழக்கச் செய்வதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. […]