மானாவாரி நில மேம்பாட்டு பயிற்சி

விருதுநகர், ஜூலை 19 விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 2024-25 ஆம் நிதியாண்டின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண் விரிவாக்க மையத்தில் 18/7/2024 அன்று மானாவாரி நில மேம்பாடு ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள் பயிற்சி அச்சம் தவில் தான் வருவாய் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்சி ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் கு தனலட்சுமி, தலைமையில் நடைபெற்றது. பயிற்சியில் விவசாயிகளின் வரவேற்று நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், ஒருங்கிணைந்த […]
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்றிட துத்தநாக சல்பேட் இடுவீர்

மதுரை, ஜூலை 19 மதுரை மாவட்டத்தில் நெற்பயிர் சுமார் 43,550 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் சுமார் 2,200 எக்டர் பரப்பில் நெல் சாகுபடி பரப்பு ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளது. நெல் பயிருக்கு அடிப்படையாகத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் தழை, சாம்பல், மணி, இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு ஆகும். துத்தநாக சத்து பற்றாக்குறை ஏற்பட காரணங்கள்ஒரே நிலத்தில் தொடர்ந்து நெல்பயிர் சாகுபடி செய்வதால், நிலத்தில் எப்போதும் நீர் தேங்கி கரையா […]
எஸ்.புதூர் வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி

சிவகங்கை, ஜூலை 18 சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரத்தில் விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி மின்னமலைபட்டி வருவாய் கிராமத்தில் 18.7.24 அன்று நடத்தபட்டது. இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி தலைமை வகித்தார். வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்சி நிலையம், செட்டிநாடு இணை பேராசிரியர், டாக்டர் ஜெயராமசந்திரன் கலந்து கொண்டு பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி தொழில்பட்பங்கள் பற்றியும் […]
பீஜாமிர்தம் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாட்டு முறை

விருதுநகர், ஜூலை 18 இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு ஐதராபாத்தில் மேனேஜ் (ஆயயெபந) நிறுவனத்தில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் க.முருகேசன் இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பீஜாமிர்தம் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாட்டு முறை குறித்து விவரிக்கிறார். இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் வளர்ச்சி ஊக்கியில் முதன்மையானது பீஜாமிர்தம் கரைசலாகும். இக்கரைசலை கொண்டு விதை நேர்த்தி செய்து பின்பு விதைகளை விதைக்கலாம். இதன் மூலம் விதை […]
ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த பயிற்சி

மதுரை, ஜூலை 18 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் 18.7.24 அன்று வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) அமுதன் தலைமையில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் மு.மயில், மத்திய மாநில திட்டங்கள் பற்றியும் […]