பயறு வகைப்பயிர்கள், எண்ணெய் வித்துக்களில் நீர் பற்றாக்குறை குறித்த மேலாண்மை பயிற்சி

அரியலூர், ஜூலை 19 அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரம், வேளாண்மைத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் அட்மா திட்டத்தில் கோடை கால பயறு வகைப்பயிர்கள், எண்ணெய் வித்துக்களில் நீர் பற்றாக்குறை குறித்த மேலாண்மை பயிற்சி விவசாயிகளுக்கு, கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுவரும் சிலால் கிராமத்தில் நடைப்பெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) செல்வகுமார் தலைமையேற்று பேசுகையில், வேளாண் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டங்கள், மெட்டாரைஸியம் பயன்பாடு, […]
மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் இயந்திரங்களின் பயன்பாடு

மதுரை, ஜூலை 19 மதுரை மாவட்டம், சேடபட்டி வட்டாரத்தில், பேரையம்பட்டி பஞ்சாயித்துக்கு உட்பட்ட நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் இயந்திரங்களின் பங்கு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைப்பெற்றது. இய்பயிற்சியில் ஆடிப்பட்டத்தில் மானாவாரி விவசாயம் தொடங்கவுள்ளது. தற்போது பெய்யும் மழையைக் கொண்டு கோடை உழவு செய்திட விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இயற்கை வேளாண் பயிற்றுநர் பொ.வேலுசாமி பேசுகையில், ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யப்பட உள்ள நிலக்கடலை சாகுபடி இயற்கை விவசாயத்தின் மூலம் சாகுபடி செய்ய விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். […]
மண் வள மேம்பாட்டிற்கு மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய பயிற்சி

சிவகங்கை, ஜூலை 19 சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டாரம், வேளாண்மைத்துறையின் கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மூலம் 2024-2025-ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லக்குளம் கிராமத்தில் 18.7.24 அன்று உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி மண் புழு உரம் தயாரிப்பு என்ந தலைப்பின் கீழ் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் தங்கபாண்டியன், விவசாயிகளுக்கு மண்ணில் கண்ணுக்கு புலப்படக்கூடிய பல வகையான மட்குண்ணிகள் இருந்தாலும் […]
மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி

சிவகங்கை, ஜூலை 19 சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை கீழ் இயங்கி வரும் (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் மூலம் மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி புலியடிதம்மம் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் புலியடிதம்மம் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டனார். இப்பயிற்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் (நேர்முக உதவியாளர்) சுந்தரமகாலிங்கம், வேளாண்மை துணை இயக்குநர் தலைமை ஏற்று உரையாற்றுகையில் பாரத பிரதமர் மந்திரி கௌரவ நிதி திட்டம் பற்றியும், விவசாய கடன் அட்டை […]
பயறுவகைப்ப யிர்களில் மகசூல் அதிகரிக்க டி.ஏ.பி கரைசல் பயன்படுத்த வேளாண்மைத்துறை அறிவுரை

நாமக்கல், ஜூலை 19 நாமக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள பயறுவகை பயிர்களில் மகசூலை பெருக்க விவசாயிகள் தவறாமல் டி.ஏ.பி., கரைசலை தெளிக்க வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கவிதா தெரிவித்துள்ளார். நடப்பு பருவத்தில், பயறு வகைகள் பயிர்கள் சில இடங்களில் வளர்ச்சி நிலையிலும், சில இடங்களில் பூக்கும் தருவாயிலும் உள்ளது. பயறு வகைபயிர்களுக்கு பரிந்துரைக்கப்படும் தொழில் நுட்பங்களான விதை நேர்த்தி, உயிர் உர பயன்பாடு, மண்ணின் தன்மைக்கு ஏற்ப உரமிடுதல், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் […]