மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி

இராமநாதபுரம், ஆக.9 இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரம், வேளாண்மை துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு உள்ளான விவசாயிகள் பயிற்சி மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி வேளாண் விரிவாக்க மையம் உச்சிப்புளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முனைவர் வள்ளல் கண்ணன் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம் முன்னிலை வகித்தார். பானுமதி வட்டார தொழில்நுட்ப மேலாளர் உச்சிப்புளி துறை அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்களை வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலையத்தின் […]

காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்

திண்டுக்கல், ஆக.9 திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வட்டம், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கை முழு மானியத்தில் வழங்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரமோகன் அறிவுரையின் படி காயர் பித் கம்போஸ்ட் பேக்கை பன்றிமலை முன்ளோடி விவசாயி திலிப்பனுக்கு கொடுத்து அதன் பயன் மற்றும் சாகுபடி முறையினை எடுத்து கூறி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் கார்த்தி, உதவி விதை அலுவலர் பூபதி, உதவி வேளாண்மை அலுவலர் செந்தில், உதவி […]

மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை

புதுக்கோட்டை, ஆக.9 புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் பயிர் சாகுபடியில் உயிர்ம இடுபொருட்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்கு வேளாண் கழிவுகளை மறு சுழற்சி செய்திடும் பொருட்டு மண்புழு கம்போஸ்ட் உரம் தயாரிக்கும் முறை குறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொ) வி.எம். ரவிச்சந்திரன் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு திட்டத்தின் வாயிலாக உயிர்ம வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் […]

பவானி வட்டாரத்தில் வணிக முறையிலான நாட்டு இன பறவைகள் வளர்ப்பு பற்றி பயிற்சி

ஈரோடு, ஆக.9 ஈரோடு மாவட்டம், பவானி வட்டாரத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வணிக முறையிலான நாட்டு இன பறவைகள் வளர்ப்பு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி சன்னியாசிப்பட்டி கிராமத்தில் 8.8.24 அன்று நடைப்பெற்றது. ம.கனிமொழி, வேளாண்மை உதவி இயக்குநர் ,பவானி வேளாண்மை – உழவர்நலத்துறை திட்டங்கள் மற்றும் கரும்பு மற்றும் நெற் பயிர் சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினார். யுவராஜ், […]

மாடித்தோட்ட காய்கறிகள் சாகுபடி செய்யும் செயல் விளக்க பொருட்கள் அடங்கிய பெட்டி வழங்கல்

திண்டுக்கல், ஆக.7 திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வட்டம், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான மாடித்தோட்ட காய்கறிகள் சாகுபடி செய்யும் செயல் விளக்க பொருட்கள் அடங்கிய பெட்டி அட்மா திட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்டது.வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரமோகன் அறிவுரையின் படி இந்த மாடித்தோட்ட தொகுப்புப் பெட்டியில் கட்டர் , காய்கறி விதைகள், கரண்டி காயர் பித் கட்டி போன்றவற்றை ஒருங்கிணைந்த விவசாயிகள் கலைஞர் திட்ட பகுதி விவசாயிகளுக்கு கொடுத்து அதன் பயன்களை பற்றி கூறி வீட்டிலேயே தங்கள் அன்றாடம் […]