கொடுமுடி வட்டாரத்தில் தாவர வளர்ச்சி யூக்கிகள் மூலம் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சி

ஈரோடு, ஜூலை 18 ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டாரம், தேவம்பாளையம் கிராமத்தில் தாவர வளர்ச்சி யூக்கிகள் மூலம் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொ.யசோதா, தலைமையேற்று துவங்கி வைத்தார். இப்பயிற்சியில் பேராசிரியர் சீனிவாசன், பயிர் பாதுகாப்புத்துறை, கே.வி.கே.மைராடா, கோபி, தாவர வளர்ச்சி யூக்கிகள் மூலம் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விரிவாகவும், செயல்விளக்கம் மூலம் தெளிவாக விளக்கி கூறினார். உழவர் […]
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளர்த்தல் பயிற்சி

ஈரோடு, ஜூலை 18 ஈரோடு வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ், செயல்படும் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகளுக்கு ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளர்த்தல் பயிற்சி நடைபெற்றது. இது குறித்து ஈரோடு மற்றும் சென்னிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.மா.சாமுவேல் தெரிவித்துள்ளதாவது. ஈரோடு வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ், செயல்படும் வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் […]
PSG அங்கக சான்றளிப்பு பற்றிய நடைமுறைகள்- பயிற்சி

விருதுநகர், ஜூலை 16 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 2024-25ஆம் நிதியாண்டு விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் பயிற்சி PSG அங்கக சான்றளிப்பு பற்றிய நடைமுறைகள் என்ற தலைப்பில் உழவர் மையம் அருப்புக்கோட்டையில் வேளாண்மை இணை இயக்குநர் விஜயா தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் அருப்புக்கோட்டை வட்டார விவசாயிகள் 40 நபர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர் நாச்சியார். மாவட்டஆட்சியர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கலந்து கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர். வேளாண்மை உதவி இயக்குநர் […]
அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி

திருச்சி, ஜூலை 16 திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டாரம் வேளாண்மைத் துறையின் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் மூலம் பிச்சாண்டார்கோயில் அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் அபிராமி வரவேற்புரை ஆற்றினார். மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) பரமசிவம் தலைமை வகித்து திட்ட விளக்க உரை ஆற்றினார்.மேலும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விதை இருப்பு மற்றும் விதைப்பு முறைகளை […]
அட்மா திட்டத்தில் கலப்பின மீன்கள் வளர்ப்பு விவசாயிகள் பயிற்சி

திருச்சி, ஜூலை 16 திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், பண்பு அறம் சுற்றி கிராமத்தில் கலப்பின மீன்கள் வளர்ப்பு விவசாயிகள் பயிற்சியில் ஆரோக்கியசாமி மீன் பண்ணை விவசாயி பேசுகையில் மீன்களின் வகைகள் மீன் குட்டை அமைத்தல் மீன்களுக்கு அளிக்கப்படும் தீவன மேலாண்மை பற்றி விரிவாக விளக்கி கூறினார். அதன் பின்பு சபாஸ்டின் செல்வி பேசுகையில் மீன் வளர்ப்பு முறையில் எவ்வாறு லாபகரமாக பயன்படுத்துதல் பற்றி விரிவாக விளக்கி கூறினார். மேலும் தங்கள் மீன் பண்ணையில் செயல்படுத்தப்படும் வழிமுறைகள் […]