ஜி.நடுப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி

திண்டுக்கல், ஜூலை 16 திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வட்டாரம், அட்மா திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி ஜி.நடுப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.இப்பயிற்சிக்கு மாவட்ட கவுன்சிலர் சுப்புலெட்சுமி தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் கார்த்தி முன்னிலையில் வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரமோகன் ஆலோசனைப்படி எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய முதுநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர் செல்வ முகிலன் சிறுதானிய முக்கியத்துவம், சிறிதானிய சாகுபடி அதன் பராமரிப்பு முறை மற்றும் இயற்கை சாகுபடி முறை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். […]
விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

மதுரை, ஜூலை 15 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் அமைச்சகமும் மேனேஜ் நிறுவனமும் இணைந்து சமிதி மூலமாக உழவர்களின் நலன் காக்க இளைஞர் உழவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு வட்டாரங்களில் இருந்தும் 28 இளைஞர் உழவர்களை தேர்ந்தெடுத்து 6 நாட்கள் பயிற்சியாக கடந்த 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி முடிய வேளாண் […]
பவானி வட்டாரத்தில் பயிறுவகை பயிர்களின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

ஈரோடு, ஜூலை 15 ஈரோடு மாவட்டம், பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பயிறுவகை பயிர்களின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொடர்பான பயிற்சி மைலம்பாடி கிராமத்தில் 11.7.24 அன்று நடைபெற்றது. ம.கனிமொழி, வேளாண்மை உதவி இயக்குநர், பவானி வேளாண்மை திட்டங்கள் மற்றும் துவரை நடவுமுறை பயிரிட்டு அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினார். செல்வகுமார், உதவி பேராசிரியர், குமரகுரு வேளாண்மை கல்லூரி, ஆப்பக்கூடல், துவரை […]
சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜூலை 15 மதுரை மாவட்டம், செல்லம்பட்டி வட்டாரத்தில் வேளாண்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கண்ணனூர் கிராமத்தில் 15.7.24 அன்று வேளாண்மை இணை இயக்குனர் சுப்புராஜ் மற்றும் துணை வேளாண்மை இயக்குனர் (மத்திய திட்டம்) அமுதன் அறிவுரையின்படி ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி […]
தளி வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி, ஜூலை 15 கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டாரத்தில் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் கலா ஆய்வு மேற்கொண்டார். வேளாண்மை துறையின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் தளி வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் பயறு, தேசிய உணவு எண்ணெய் இயக்கம், மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் போன்ற திட்டங்களில் […]