தென்னை நார்கழிவிலிருந்து உரம் தயாரிக்கும் பயிற்சி

இராமநாதபுரம், ஜூலை 15 இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் தென்னை நார்கழிவு உரமாக்குதல் பயிற்சி நடைபெற்றது.இப்பயிற்சியில் தென்னை நார்கழிவில் உரம் தயாரிப்பு குறித்து, உச்சிப்புளி வட்டார அரியமான் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லெட்சுமி காயர் உரிமையாளர் சக்தி கணேஷ் கூறியதாவது, தென்னை நார்க்கழிவு மட்கு உரம் தயாரித்தல் தொடர்பாக மூலப்பொருட்களை சேகரித்தல், உரக்குவியல் அமைத்தல், ஈரப்பதத்தை தக்கவைத்தல், மக்கிய உரம் சேகரிக்கும் முறை,மட்கிய தென்னை நார்க்கழிவின் பயன்கள் குறித்து விளக்கம் […]
புதுக்கோட்டை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவங்களின் முன்னேற்ற முனைப்பு முகாம்

புதுக்கோட்டை, ஜூலை 13 புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் நபார்டு வங்கி மூலம் அமைக்கப்பட்ட 10,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய முனைப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் துணை இயக்குநர் ரா.ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நபார்டு வங்கி மேலாளார் தீபக்குமார் செய்திருந்தார். […]
மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரமாக்கல் பயிற்சி

விருதுநகர், ஜூலை 13 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 2024-25 ஆம் நிதியாண்டு விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் பயிற்சி மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரமாக்கல் என்ற தலைப்பில் புலியூரான் கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் ரா.பத்மாவதி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையம் பண்ணை மேலாளர் ஜீவா, மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து தொழில் நுட்பவுரையாற்றினார். வேளாண்மை உதவி இயக்குநர் பத்மாவதி, நிலக்கடலை சாகுபடி பயிர் பாதுகாப்பு […]
மணப்பாறை அருகே மலையடிப்பட்டி கிராமத்தில் மண்புழு உரம் தயாரித்தல் ஒரு நாள் பயிற்சி

திருச்சி, ஜூலை 13 திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டாரம் வேளாண்மைத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை கீழ் 2024-25 ஆம் ஆண்டு மலையடிப்பட்டி கிராமத்தில் மண்புழு உரம் தயாரித்தல் உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் ஒரு நாள் பயிற்சி நடைப்பெற்றது. இதில் மணப்பாறை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் கண்ணன் பேசுகையில், மண் புழு உரம் தயாரித்தல் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி தெளிவாக விவசாயிகளுக்கு விளக்கிக் கூறி மண் புழு வகைகள், தொட்டி […]
இயற்கை வேளாண்மை – விதை நேர்த்தி இடுபொருள் பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை

இயற்கை வேளாண்மை அல்லது நஞ்சில்லா விவசாயம் அல்லது அங்கக வேளாண்மை என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இவ்வேளாண்மை முறை தொன்று தொட்டு விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வந்தாலும் பசுமை புரட்சியின் எதிர் மறை விளைவுகளை உணர்ந்த பின்னர் மீண்டும் புத்துயிர் பெற மத்திய, மாநில அரசுகள் ஊக்கமளிக்கின்றன. இயற்கை வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மண்ணின் வளத்தை காப்பதோடு மட்டுமல்லாமல், மண் வளம் அதிகரிக்கவும் வழி வகை செய்கின்றன. இந்த முறையில் இரசாயன உரங்கள், பூச்சி, பூஞ்சாணக் கொல்லிகள் […]