வேளாண் விளைபொருட்களில் மதிப்புக்கூட்டல் குறித்த விவசாயிகள் பயிற்சி

விருதுநகர், ஜூலை 12 விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் அனுப்பன்குளம் கிராமத்தில் விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல் குறித்த தொழில்நுட்பபயிற்சி நடைபெற்றது. இது குறித்து சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ப.சுந்தரவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிவகாசி வட்டாரத்தில் 2024-25ம் நிதியாண்டில் அனுப்பன்குளம் கிராமத்தில் விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல் குறித்த தொழில்நுட்ப பயிற்சியானது நடைபெற்றது. இப்பயிற்சிக்கு சிவகாசி, வேளாண்மை உதவி இயக்குநர் ப.சுந்தரவள்ளி தலைமையேற்று வேளாண்மைத்துறை மூலம் மானிய விலையில் […]
சூலூரில் சோளம் முதிர்ச்சி பருவ ஆய்வுப்பணி

கோயம்புத்தூர், ஜூலை 12 கோவை மாவட்டம், சூலூர் வட்டாரத்தில் சித்திரை, பட்டத்தில் விதைத்த சோளம் விதைப்பண்ணைகளில் தற்போது முதிர்ச்சி பருவம் மற்றும் அறுவடை பருவம் காணப்படுகின்றது. சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் சோளம் விதைப்பண்ணையில் நேற்று ஆய்வு செய்த கோவை விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்றுத் துறை உதவி இயக்குநர், பி.ஆ.மாரிமுத்து கூறியதாவது, தற்சமயம் சித்திரை பட்டத்தில் அமைத்த சோளம் விதைப்பண்ணைகள் முதிர்ச்சி பருவம் அடைந்துள்ளது. விதைத்தரத்தினை நிர்ணயிக்கும் கலவன் கணக்கீடு, விதை வழி பரவும் நோய்களான கரிப்பூட்டை , சோரி […]
மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

சேலம், ஜூலை 12 சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டாரம், தலைச்சோலை பஞ்சாயத்தில் வேளாண்மை துறை ஆத்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்ட அளவிலான பயிற்சி மண்புழு உரம் தயாரித்தல் என்னும் தலைப்பின் கீழ் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு ஆத்மா சேர்மன் தங்கசாமி தலைமை வகித்தார். மேலும் மண்புழு உரம் எவ்வாறு தயாரிப்பது அது எந்தெந்த பயிர்களுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் முனைவர் செந்தில்குமார், பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் இப்பயிற்சியின் […]
உச்சிப்புளி வட்டாரத்தில் மண்புழு உர உற்பத்தி பயிற்சி

இராமநாதபுரம், ஜூலை 11 இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி வட்டாரத்தில் 2024-25 ஆம் நிதியாண்டில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுனை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நடப்பாண்டில் தேர்வாகியுள்ள கும்பரம் கிராமத்தில் 40 விவசாயிகளுக்கு மண்புழு உர உற்பத்தி சம்பந்தமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் வேளாண்மை அலுவலர் சபிதா பேகம், மண்புழு உர உற்பத்தி முறைகள்,மண்புழு இரகங்கள் தேர்ந்தெடுத்தல், உரம் தயாரிக்க உகந்த […]
விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்தி பயிர் உற்பத்தியை பெருக்கும் பயிற்சி

சேலம், ஜூலை 11 சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி உமையாள்புரம் கிராமத்தில், பயறு வகை பயிர்களில் சான்று பெற்ற விதை நேர்த்தி விதைகளை பயன்படுத்தி உயிர் உற்பத்தியை பெருக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது.இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதற்காக டாக்டர் நடராஜன், இணைப் பேராசிரியர், மரவள்ளி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூரில் இருந்து வருகை புரிந்தார். […]