தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துகள் தொழில்நுட்பம் பற்றிய சர்வதேசப் பயிலரங்கம்

கோயம்புத்தூர், ஜூலை 10 வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், ஜூலை 2 முதல் 9ம் தேதி வரை துகள் தொழில்நுட்பம் (IWPT ‘24) பற்றிய சர்வதேசப் பயிலரங்கு நடைபெற்றது. இப்பயிலரங்கம் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் துகள் மற்றும் தூள் பண்புகளை மையமாகக் கொண்டுள்ளது. சர்வதேச நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ், பங்கேற்பாளர்கள் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் பயன்பாடுகளில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றனர். இப் பயிலரங்கம் தொடக்க […]

வேளாண்மை துறையின் சார்பாக மானாவாரி நிலக்கடலையில் இயந்திரமாக்கல் பயிற்சி

இராணிப்பேட்டை, ஜூலை 10வேளாண்மை துறையின் சார்பாக அட்மா திட்டத்தில் மானாவாரி நிலக்கடலை பயிரில் இயந்திரமயமாக்குதல் பயிற்சி இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டாரத்தில் கத்தாரிக்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வாலாஜா வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி தலைமை ஏற்று நிலக்கடலையில் இயந்திர மயமாக்குதலின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும், விதை நேர்த்தி, கடினப்படுத்துதல் நன்மைகள், 3 முதல் 5 சென்டிமீட்டர் ஆழத்தில் விதைக்கும் கருவிகள் கொண்டு விதைக்கப்படுவது சாலச் சிறந்தது என்பதையும் விதைப்பது பருவமழைக்கு முந்தையதாக […]

உழவர் நண்பன் பயிர் மருத்துவர் பயிற்சி முகாம்

திருச்சி, ஜூலை 10 திருச்சி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கிரியா அறக்கட்டளை, திருச்சி மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய உழவர் நண்பன் பயிர் மருத்துவர் பயிற்சி முகாம் லால்குடி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக பயிற்சி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய வேளாண்மை இணை இயக்குனர் எம். சக்திவேல் “விவசாயிகள் பயிர் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பூச்சி அல்லது நோய் வந்த பின்பு இடு பொருட்களை […]

வேளாண்மை துறை திட்டங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு, ஜூலை 9 ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் துவரை செயல்விளக்கத்திடல் நாற்று உற்பத்தியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். துவரை விவசாயிகளிடையே மானிய விவரத்தை கேட்டறிந்தார். மேலும் விவசாயிக்கு வழங்கப்பட்ட மானிய விவரங்கள் பற்றியும் நாற்று உற்பத்தி பற்றியும் வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி விளக்கினார். மேலும் வேளாண் துறை சார்ந்த திட்டங்கள் பற்றியும் பயன்பட்ட விவசாயிகள் மானிய விவரங்கள் மற்றும் பயனடைந்தோர் பற்றிய விளக்கங்களை மாவட்ட ஆட்சியர் […]

இயற்கை விவசாயத்தின் மூலம் கூடுதல் வருமானம்

மதுரை, ஜூலை 9 மதுரை மாவட்டம், சேடபட்டி வட்டாரத்தில் மள்ளப்புரம் கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் ஆடிப்பட்டத்தில் மானாவாரி விவசாயம் தொடங்கவுள்ளது. தற்போது பெய்யும் மழையைக் கொண்டு கோடை உழவு செய்திட விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இயற்கை வேளாண் பயிற்றுநர் பொ.வேலுசாமி பேசுகையில், ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் சோளம், மக்காச்சோளம், பருத்தி, பயறு வகைகள், குதிரைவாலி பயிர்களை இயற்கை விவசாயத்தின் மூலம் சாகுபடி செய்ய விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதாவது பஞ்சகாவ்யம், […]