ஒருங்கிணைந்த பயிர் நிர்வாகம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

இராமநாதபுரம், ஆக.7 இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரம், வேளாண்மை துறையின் அட்மா திட்டத்தின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மானாங்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் நிர்வாகம் குறித்து விவசாயிகள் பயிற்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிவகாமி வேளாண்மை உதவி இயக்குனர், விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை, ராமநாதபுரம் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விதை நேர்த்தி முறைகள், சான்று நிலை விதைகள் பயன்கள், அங்கக சான்று […]

பெருந்துறை வட்டாரத்தில் இயற்கை வேளாண்மை இடுபொருள்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி

ஈரோடு, ஆக.7 ஈரோடு வட்டாரம், பெருந்துறை வட்டாரம், வேளாண்மை – உழவர் நலத்துறை கீழ், செயல்படும் வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் கருக்குபாளையம் வருவாய் கிராமத்தில் 7.8.24 அன்று உழவர்களுக்கு இயற்கை வேளாண்மையில் இடுபொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது. பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் க.பிரசாத் தலைமையேற்று பேசுகையில் இயற்கை வேளாண்மையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் குறித்தும் அவற்றை கட்டுப்படுத்தம் முறை குறித்தும் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் […]

எஸ்.புதூர் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி

சிவகங்கை, ஆக.7 சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரம், அட்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி மானாவாரி நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் வேளாண் விரிவாக்க மையம் எஸ்.புதூரில் 29.7.24 அன்று நடத்தபட்டது. இப்பயிற்சிக்கு எஸ்.புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி, பயிற்சியினை தொடங்கி வைத்து வரவேற்புரை வழங்கினார். தோட்டக்கலைதுறை உதவி இயக்குநர் சரவணன், தோட்டக்கலைத் துறையின் திட்டங்கள் பற்றியும் அதன் பயன்கள் மற்றும் […]

கொடுமுடி வட்டாரத்தில் எள் பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

ஈரோடு, ஆக.7 ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின், கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம்; கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் இச்சிப்பாளையம் வருவாய் கிராமத்தில் விவசாயிகளுக்கு எள் பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை தொழில்நுட்பம் குறித்த பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் பொறுப்பு மு.ரேகா, தலைமை தாங்கி முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர பயிர் சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் பசுந்தாள் உர […]

இந்திய பொதிவாக்க தொழில்நுட்ப கழகப் பயிற்சி

கடலூர், ஆக.7 கடலூர் மாவட்டம், விருத்தாசலம், வேளாண்மைஅறிவியல் நிலையத்தில் 5.8.24 மற்றும் 6.8.24 இரண்டு நாட்கள் தொழில்நுட்ப கழக பயிற்சி நடைப்பெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுதுணையோடு, இந்திய பொதிவாக்கத் தொழில் நுட்பகழகம், சென்னை நிதி உதவியோடு, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மேம்படுத்தப்பட்ட உயர்தர பொதிவாக்கத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் நடைப்பெற்றது. 60 கும் மேற்பட்ட கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம் மாவட்டஉழவர் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் பேக்கேஜிங் […]