கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் விநியோகம்

புதுக்கோட்டை, ஜூலை 2 புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டார விவசாயிகள் மண்வளத்தினை மேம்படுத்திடும் பொருட்டு வேளாண்மை துணை இயக்குநர் சங்கரலட்சுமி பசுந்தாள் உர விதைகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்தார். இது குறித்து வேளாண்மை துணை இயக்குநர் கூறுகையில் எதிர்வரும் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளவிருக்கும் விவசாயிகள் தரிசாக உள்ள தங்கள் நிலங்களை உழவு செய்து பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு விதைகளை விதைத்து மடக்கி உழுவதால் மண்வளம் அதிகரித்து நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம். […]

மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு விருது

மதுரை, ஜூலை 1 மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடையில் வேளாண்மை அறிவியல் நிலையமானது வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 2004–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து அவர்களின் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதே இந்நிலையத்தின் நோக்கமாகும். இந்நிலையம் மதுரை மாவட்டத்தின் பல்வேறு வட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் வயல்வெளி ஆய்வுகள், முதல்நிலை செயல்விளக்கம் மூலம் புதிய மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை பல்வேறு வட்டாரத்தில் முன்னெடுத்துச் செய்துள்ளது. […]

தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் வேளாண் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

ஈரோடு, ஜூலை 1 ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரம், சென்றாயம்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்ட கரும்பு நுண் நீர்ப்பாசன (ளுரடி ளுரசகயஉந) வயலை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். கரும்பு வயலில் பூமிக்கு அடியில் குழாய் பதித்து அதன் மூலம் சொட்டு நீர் பாசனம் செய்யப்பட்ட வயலை ஆய்வு செய்து அதன் நன்மைகள், வழங்கப்பட்ட மானியம் ரூ.2,48,796ஃ- குறித்து விவசாயி மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் யுவுஆயு திட்டத்தின் கீழ் செயல் விளக்கம் – ரூ.4,000/- மதிப்புள்ள […]

நிலக்கடலைப் பயிரில் சுருள்பூச்சி மேலாண்மை முறைகள்

புதுக்கோட்டை, ஜூலை 1 நிலக்கடலைச் சாகுபடி மேற்கொள்ளும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நிலக்கடலைப் பயிரினைத் தாக்கும் சுருள்பூச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) வி.எம்.ரவிச்சந்திரன் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிரில் சுருள்பூச்சிகளின் தாக்குதல் காணப்படுகிறது. இதனை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையினைக் கடைபிடித்து கட்டுப்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாக்குதல் அறிகுறிகள்சுருள்பூச்சிப் புழுக்கள் இலைகளைத் துளைத்து உண்ணும். […]

மண் வள மேம்பாட்டிற்க்கு பசுந்தாள் உரப்பயிர் பயிரிடுவீர்

சிவகங்கை, ஜூன் 26 சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை 2024-2025-ம் ஆண்டில் தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் உற்பத்தியினை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிவகங்கை வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) மதுரைசாமி இத்திட்டத்தில் மானியத்தில் விஜயன்குடி கிராம விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை வழங்கினார். மேலும் முக்கிய இனமான பசுந்தாள் உர உபயோகத்தினை விவசாயிகளிடையே ஊக்குவித்து மண் வளம் காக்கும் வகையில் பசுந்தாள் […]