நாமக்கல் மாவட்டத்தில் பயிர் நோய் மேலாண்மையில் பசுந்தாள் உரப்பயிர்களின் பங்கு
நாமக்கல் மாவட்டம், வேளாண்மைத்துறையின் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கவிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் மாவட்டத்தில் பசுந்தாள் உரப்பயிர்களான கொளிஞ்சி, சணப்பை, தக்கைப்பூண்டு, நரிப்பயறு, ஆகியவற்றை இயற்கை உரமாக பயன்படுத்தும் போது அவை மண்ணின் வளத்தைப் பாதுகாக்க, கரிமச்சத்தின் அளவை அதிகரிப்பதும் நிலை நிறுத்துவதும் மிக அவசியம். களைகளை குறைக்கவும், மண்ணிலும் பயிர்களிலும் நோய்களை தோற்றுவிக்கும் நோய் வித்துக்கள் முளைப்பதைக் குறைப்பதிலும், முளைக்கப்பட்ட நோய்க்காரணிகளின் வித்துக்களை செயல் இழக்கச் செய்வதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. […]