தலைவாசல் வட்டாரத்தில் அங்கக இடுபொருட்கள் உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி

சேலம், ஆக.7 சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் தியாகனூர் கிராம விவசாயிகளுக்கு அங்கக இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி வழங்கப்பட்டது. துணை வேளாண்மை அலுவலர் மணவழகன் பயிற்சிக்கு தலைமை தாங்கினார். இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். வட்டாரத் தொழில்நுட்பம் மேலாளர் சக்தி அனைவரையும் வரவேற்று பேசினார். மண் மாதிரி எடுத்தலின் அவசியம், உயிர் உரங்களை உபயோகிப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசினார்.இயற்கை விவசாயி மற்றும் உழவர் உற்பத்தி […]

மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விவசாயிகள் பயிற்சி

சிவகங்கை, ஆக.6சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரம் வேளாண்மைத் துறையின் மூலம் அட்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான உள்மாவட்டஅ ளவிலான விவசாயிகள் பயிற்சி மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் 40 விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மானாமதுரையில் பயிற்சி அளிக்கப்பட்டது.இப்பயிற்சிக்கு மானாமதுரை வேளாண்மை உதவி இயக்குநர் ஜா.இரவிசங்கர் பயிற்சியினை தொடங்கி வைத்து வரவேற்புரை வழங்கினார். மேலநெட்டூர் கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் கால்நடை வளர்ப்பு மற்றும் ஊட்டச்சத்துமேலாண்மை […]

வாலாஜா வட்டாரத்தில் தனிப்பட்ட விவசாயிகளின் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றிட திட்டம்

இராணிப்பேட்டை, ஆக.6 கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்றி சமன் செய்து உழுவதற்கு மானியம் வழங்கப்படுகிறது என வாலாஜா வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, தெரிவித்தார். ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்று முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்ற நோக்கில், முதன்மைத் தொழிலான உழவுத் தொழிலை மேம்படுத்தி, நிகர சாகுபடிப் பரப்பை அதி கரித்திட தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி விவசாயிகளுக்குத் தந்திட ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் […]

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இயற்கை வேளாண்மை பயிற்சி

கடலூர், ஆக.6 கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வேளாண்மைஅறிவியல் நிலையத்தில் இயற்கைவேளாண்மை நண்பர்களுக்கான 5 நாட்கள் (30.07.2024 முதல் 03.08.2024) வரைபயிற்சி நடைபெற்றது. தொடக்க பயிற்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் க. நடராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து தொழில்நுட்ப விஞ்ஞானிகள், இயற்கை வேளாண்மை பற்றியும், மண்வளம் பேணி காப்பது குறித்தும், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், மண்வளத்தை மீட்டு எடுத்தல், சுற்றுசூழல் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை, மண்ணின் ஆரோக்கியம், மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கியத்துவம் […]

கால்நடை வளர்ப்பில் தீவனப்பயிர்களின் முக்கியத்துவம் குறித்த இலவசப் பயிற்சி

கரூர், ஆக.6 கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகில் பண்டுதகாரன்புதூரில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் கால்நடை வளர்ப்பில் தீவனப்பயிர்களின் முக்கியத்துவம் பற்றிய ஒரு நாள் உள்வளாக பயிற்சி 8.8.24 (வியாழக்கிழமை) அன்று இலவசமாக அளிக்கப்படவுள்ளது. விவசாயிகள் / கால்நடை பண்ணையாளர்கள் / கால்நடை தீவனப்பயிர் வளர்ப்பில் ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொண்டு தீவனப்பயிர் உற்பத்தி தொடர்பாக தங்களுக்கு உள்ள சந்தேகங்களுக்கு தெளிவு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். பயிற்சியில் கலந்து கொள்ள […]