பயறுவகை பயிர்களில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை விவசாயிகள் பயிற்சி

சிவகங்கை, ஆக.5 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் வேளாண்மைத்;துறையின் மூலம் அட்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி பயறுவகை பயிர்களில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை என்ற தலைப்பில் 40 விவசாயிகளுக்கு வேதியரேந்தல் கிராமத்தில் பயிற்சிஅளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு மானாமதுரை வேளாண்மை உதவி இயக்குநர் ஜா.இரவிசங்கர் பயிற்சியினை தொடங்கி வைத்து வரவேற்புரை வழங்கினார். சேதுபாஸ்கர வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவிபேராசிரியர் முனைவர் கனிமொழி, சமச்சீர் […]

சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த தொழில்நுட்ப பயிற்சி

அரியலூர், ஆக,5 அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில், ஆங்கியனூர் மற்றும் கொரத்தாக்குடி கிராமங்களில் சிறுதானிய சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த தொழில்நுட்ப பயிற்சி வேளாண்மை துறையின் மூலம் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் திருமலை வாசன் சிறு தானியங்களில் மக்காச்சோளம், கம்பு, சோளம், கேழ்வரகு முதலிய பயிர்களில் சாகுபடி முறைகளான விதை ரக தேர்வு, விதை அளவு, விதை நேர்த்தி, […]

பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

சேலம், ஆக.5 சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி வரகூர் கிராம விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வரகூர் கிராம தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சக்தி வரவேற்று பேசினார். துணை வேளாண்மை அலுவலர் மணவழகன் பாரம்பரிய நெல் சாகுபடியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றி கூறினார். வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மாநில அரசு திட்டங்கள் பற்றி […]

இயற்கை வேளாண்மை/அங்ககவேளாண் இடுபொருட்கள் தயாரித்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

ஈரோடு, ஆக.5 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை/அங்கக வேளாண் இடுபொருட்கள் தயாரித்தல் பயிற்சி தாசரிபாளையம் கிராமத்தில் 5.8.24 அன்று கு.கற்பகம், வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) தலைமையில் நடைபெற்றது. ப.உமா மகேஸ், வேளாண்மை அலுவலர், மத்திய மற்றும் மாநில திட்டங்கள் மற்றும் உயிர் உரங்கள் உபயோகிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார். சங்கீதா, உதவி பேராசிரியர் JKK கல்லூரி […]

சர்கார்சாமக்குளம் வட்டாரத்தில் அமைக்கப் பட்டுள்ள விதைப்பண்ணைகளை விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் ஆய்வு

கோயம்புத்தூர், ஆக.3 கோவை மாவட்டம் சர்கார்சாமக்குளம் வட்டாரத்தில் நடப்பாண்டு வேளாண்மை துறையினால் விதை உற்பத்திக்காக அமைக்கப்பட்டுள்ள சோளம், கம்பு அரசு விதைப்பண்ணைகளை விதைச்சான்றளிப்புமற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் பி.ஆ. மாரிமுத்து ஆய்வு செய்தார். இனத்தூய்மை, புறத்தூய்மை மற்றும் நல்ல முளைப்புத்திறன் கொண்ட சான்று விதை விவசாயிகளை சென்று அடைய அரசு விதைப்பண்ணை அமைத்து விதைச்சான்றளிப்பு அலுவலர்களால் பயிர்களின் முக்கிய பருவங்களில் ஆய்வு செய்யப்பட்டு, விதை சுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டபின் விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விதை ஆதாரம், சான்று […]