தரமான நெல்விதை உற்பத்தி பற்றிய களப்பயிற்சி

திருச்சி, ஆக.3 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி யாகதிருச்சி மாவட்டம், வையம்பட்டி வட்டாரத்தில் உள்ள அரசு நிலைப்பாளையம் கிராமத்தில் நெல்லில் தரமான விதை உற்பத்தி பற்றிய களப்பயிற்சியானது 31.7.24 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் 30 விவசாய பெண்கள் மற்றும் விவசாயிகள் பங்கு பெற்று பயனடைந்தனர். இப்பயிற்சியில் தரமான விதையின் குணாதிசயங்கள், விதைதேர்வு, விதைநேர்த்தி, வயல்தேர்வு, ஒருங்கிணைந்தஉரநிர்வாகம், கலவன்அகற்றுதல், அறுவடை, […]
அட்மா திட்டத்தில் மண்புழு உரம் குறித்த பயிற்சி
அரியலூர், ஆக.3 அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரம், வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் விவசாயிகளுக்கான மண்புழு உரம் உற்பத்தி குறித்த பயிற்சி வாழைக்குறிச்சி கிராமத்தில் நடைப்பெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் கலந்து கொண்டு பேசுகையில் மண்புழு உரமானது விவசாயிகளுக்கு மண்ணின் வளத்தை பாதுகாத்து பயன்தரும் வரப்பிரசாதமாக திகழ்கிறது என கூறினார். மேலும் அவர் பேசுகையில் மண்புழுஉரம் இடுவதால் மண்துகள்கள் ஒன்றாக இணைந்து ஒட்டி குருணை போன்ற […]
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி

கோயம்புத்தூர், ஆக.3 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி 6 மற்றும் 7.8.24 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், (வாயில் எண்.7, மருதமலை சாலை வழி) நடைபெறும். கீழ்கண்டஉணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும். சு தோசைமிக்ஸ்சு அடை மிக்ஸ்சு டேக்ளாமிக்ஸ்சு பிசிபெலா பாத் மிக்ஸ்சு கீர் மிக்ஸ்சு ஐஸ்கீரிம் […]
சவுடு மண்ணில் கிர்ணி பழம் சாகுபடி

திருவள்ளூர் விவசாய பட்டதாரி சாதனை சவுடு மண்ணில், கிர்ணி பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.எல்.ஆர்., பண்ணை முதுகலை பட்டதாரி முன்னோடி விவசாயி பி.மாதவி கூறியதாவது: எங்களுக்கு சொந்தமான சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி, காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், தோசை பண்டு என அழைக்கப்படும், கிர்ணி பழம் சாகுபடி செய்துள்ளேன். கிர்ணி பழத்திற்கு, சவுடு கலந்த களிமண் […]
இராமநாதபுரம் வட்டாரத்தில் பெருவயல் கிராமத்தில் சமச்சீர் உரமிடல் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் இரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல்
இராமநாதபுரம், ஆக. 2 இராமநாதபுரம் வட்டாரம் பெருவயல் பஞ்சாயத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ்சமச்சீர் உரமிடல்மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் இரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல் விவசாயிகள் பயிற்சிநடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய இராமநாதபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மா.கோபாலகிருஷ்ணன் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய தி ட்டங்கள், மானிய விபரங்களை உழவன் செயலி மூலம் பதிவு செய்தல் விபரங்கள் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த […]