பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

சேலம், ஆக.2 சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி வரகூர் கிராம விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வரகூர் கிராம தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சக்தி வரவேற்று பேசினார். துணை வேளாண்மை அலுவலர் மணவழகன் பாரம்பரிய நெல் சாகுபடியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றி கூறினார். வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மாநில அரசு திட்டங்கள் பற்றி […]

பயறுவகை பயிர்களில் சான்றளிக்கப்பட்ட விதைகளின் பயன்பாடு, விதை நேர்த்தி மற்றும் மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி

புதுக்கோட்டை, ஆக.2 புதுக்கோட்டை வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டிற்கு பயறுவகை பயிர்களில் சான்றளிக்கப்பட்ட விதைகளின் பயன்பாடு, விதை நேர்த்தி மற்றும் மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி ஆதனக்கோட்டை கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சியில் எம்.ஆதிசாமி வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசன திட்டம்) கலந்து கொண்டு நுண்ணீர் பாசன திட்டத்தின் முக்கிய நோக்கம் மற்றும் அதனை பெற விரும்பும் […]

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோயம்புத்தூர், ஆக.2 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒருநாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி இம் மாதத்திற்கான பயிற்சி, 5.8.24 திங்கட்கிழமை அன்று காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பயிற்சியில் கலந்து கொள்ளவிழைவோர், பயிற்சி நாளன்று, பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமான ரூ.590/- (ரூபாய் ஐநூற்று தொண்ணூறு மட்டும்) நேரிடையாக செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், […]

உயிர்ம இடுபொருள் உற்பத்தி பயிற்சி

சேலம், ஆக.1 வேளாண்மை துறையின் சார்பாக ஆத்மா திட்டத்தில் கடப்பேரி கிராமத்தில் உயிர்ம இடுப்பொருள் உற்பத்தி பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி தலைç மயேற்று வேளாண் துறை சார்ந்த திட்டங்களான மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், பயறு வகை பயிர்களை வரப்பு பயிர்களாகவும் ஊடு பயிர்களாகவும் பயிரிடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள், சணப்பை, தக்க பூண்டு போன்ற தழைசத்து கொண்ட பயிர்களை பயிரிடுதல் அவற்றை மக்கச் செய்து மண்ணிற்கு தழைச்சத்தை எவ்வாறு அளித்தல், பயறு […]

சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய அறிவுறுத்தல்!

தஞ்சாவூர், ஆக.1 சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் வினாயகமூர்த்தி தனியார் விதை விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில், சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள் சான்று விதைகளில் இரு அட்டைகள் (வெள்ளை அல்லது நீலநிறம்) முறையே சான்று அட்டை மற்றும் விவர அட்டை பொருத்தப்பட்ட விதைகளையே […]