December 6, 2024

PSG அங்கக சான்றளிப்பு பற்றிய நடைமுறைகள்- பயிற்சி

விருதுநகர், ஜூலை 16

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 2024-25ஆம் நிதியாண்டு விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் பயிற்சி PSG அங்கக சான்றளிப்பு பற்றிய நடைமுறைகள் என்ற தலைப்பில் உழவர் மையம் அருப்புக்கோட்டையில் வேளாண்மை இணை இயக்குநர் விஜயா தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் அருப்புக்கோட்டை வட்டார விவசாயிகள் 40 நபர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர் நாச்சியார். மாவட்டஆட்சியர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கலந்து கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர். வேளாண்மை உதவி இயக்குநர் பத்மாவதி. இயற்கை விவசாயம் மற்றும் உயிர் உரங்கள் உபயோகம் குறித்து எடுத்துரைத்தார். துர்காதேவி. வேளாண்மை அலுவலர், மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி தொழில்நுட்ப உரையாற்றினார். இதில் கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையம் பேராசிரியர் வேனுதேவன் PSG அங்கக சான்றளிப்பு பற்றிவிரிவாக எடுத்துரைத்தார். மண்பரிசோதனை நிலையம் வேளாண்மை அலுவலர் முருகேசன் அங்கக சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார். அசோக்குமார் (அங்கக விவசாயி) பஞ்சகாவ்யா. ஜீவாமிர்தம். மீன் அமிலம் பயன்பாடு பற்றி விரிவாக எடுத்துரைத்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பெருமாள்சாமி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சதீஸ்குமார் செய்தனர்.