ஓசூர் வட்டார விவசாயிகளுக்கு ஆயிரம் ஏக்கரில் துவரை சாகுபடி மானியத்திட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 26 கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அ.புவனேஸ்வரி, ஓசூர் வட்டார விவசாயிகளுக்கு கூறியதாவது : 2024-2025 ஆம் ஆண்டில் வேளாண்மைத்துறையில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் துவரை சாகுபடி பரப்பை அதிகப்படுத்த வரப்பு பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 1.2 கிலோ விதை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. தனிப்பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதை, உயிர் உரங்களான ரைசோபியம் 500 […]

உதவி விதை அலுவலர்களுக்கு விதைச்சான்று நடைமுறை தொழில்நுட்ப பயிற்சி

கோவை, ஜூன் 24 கோவை மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத் துறையின் மூலம் அனைத்து உதவி விதை அலுவலர்களுக்கு விதைச்சான்று நடைமுறைகள் குறித்து தொழில்நுட்ப பயிற்சி நேற்று வழங்கப்பட்டது. பயிற்சியினை கோவை மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத் துறை உதவி இயக்குநர் பி.ஆ.மாரிமுத்து தலைமையுரை ஆற்றி துவக்கி வைத்தார். சான்று விதைகளின் முக்கியத்துவம், விதைப்பறிக்கை தயாரித்தல் விதைப்பண்ணை பதிவு செய்தல், ஆகிய தொழில்நுட்பம் குறித்த பயிற்சியை ஆ.சதாசிவம், விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) வழங்கினார். ஹேமலதா, விதைச்சான்று அலுவலர் […]

மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற சோள வகைகள்

சோளம் மக்களின் முக்கிய உணவு தானிய வகைகளில் ஒன்றாகும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது. இந்தியாவில் நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருளாக சோளம் உள்ளது. இதில் அதிகளவில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து. உயிர்சத்துக்கள், தாது உப்புக்களும் மற்றும் கறைந்த அளவில் கொழுப்பும் உள்ளன. சோளப் பயிர் எல்லா மண் வகைகளிலும், தட்ப வெப்ப நிலைகளிலும் நன்றாக வளரும். மக்காச்சோளத்தைவிட வறட்சியைத் தாங்கி வளரும். சோளம் மனித உணவாகவும், முட்டைக்கோழித் தீவனமாகவும், லைசீன் மற்றும் மீத்தியோனின் […]

பூதகுடி கிராமத்தில் காரீப் பருவ விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜூன் 22 மதுரை மாவட்டம், மேற்கு வட்டாரம், வேளாண்மைத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட நிதியின் 2024-25ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பூதகுடி கிராமத்தில் பூதகுடி, கிராம வேளாண் முன்னேற்றக்குழு உறுப்பினர்களுக்கான காரீப் பருவ பயிற்சியானது 22.6.24 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் மதுரை மேற்கு வட்டார வேளாண்மை அலுவலர் ம.கனிமொழி, கலைஞர் திட்டம் குறித்தும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் பற்றியும், […]