அட்மா திட்டத்தின் கீழ் வளமான மண்வளம் பெற விவசாயிகள் பயிற்சி

அரியலூர், ஜூலை 3 அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரம், வேளாண்மைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் சோழமாதேவி கிராமத்தில் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் தலைமையேற்று பேசுகையில் ரசாயன உரங்கள் பயன்பாட்டினை குறைப்பது குறித்தும் பேரூட்டச்சத்து, நுண்ணூட்டச்சத்து மற்றும் அதன் அவசியம் குறித்தும் விளக்கினார். உயிர் உரங்களை தொழுஉரத்துடன் கலந்து வைத்து நுண்ணுயிர்களைப் பெருக்கி வயலில் […]
உரிய பதிவு சான்றுகள் இன்றி விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை
சிவகங்கை, ஜூலை 3 தமிழ்நாடு விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறையில் பதிவு செய்யப்படாத உண்மைநிலை விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை விதை ஆய்வு துணை இயக்குநர் ம.இப்ராம்சா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, விவசாயிகள் விதை விற்பனை உரிமம் உள்ள விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகள் வாங்க வேண்டும். தாங்கள் வாங்கும் விதைகளுக்கு கட்டாயம் இரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். விற்பனை பட்டியலில் பயிர், ரகம், […]
TNAU – தொலைநிலை பைலட் பயிற்சி நிறுவன சான்றிதழ் வழங்கும் விழா

கோவை, ஜூலை 2 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை தொலைதூர விமான ஓட்டிகள் பயிற்சி நிறுவனமாக (TNAU RPTO) சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் (DGCA) அங்கீகரித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அதன் சமீபத்திய பயிலுநர்களுக்கு RPTO சான்றிதழ்களை வழங்கியதன் மூலம் ஒரு குறிப்பிட்டதக்க மைல்கல்லைக் குறித்தது. துணைவேந்தரின் குழு அறையில் நடைபெற்ற இந்த விழாவில், நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (IDP) கீழ் தேசிய வேளாண் உயர் கல்வி திட்டத்தின் (NAHEP) ஆதரவுடன் தொலைதூர […]
நெல் மற்றும் பயறுவகை பயிர்களில் உயர் விளைச்சல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய நிலையப் பயிற்சி (SCSP திட்டம்)

மதுரை, ஜூலை 2 மதுரை மாவட்டம், ஒத்தக்கடை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் “நெல் மற்றும் பயறுவகை பயிர்களில் உயர் விளைச்சல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய நிலையப் பயிற்சி 2.7.24 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைர், இ.சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் நோக்கங்கள், முக்கியத்துவம், திட்டங்கள் மற்றும் பயன்கள் குறித்து உரையாற்றினார். மேலும் இப்பயிற்சியில் நெல் மற்றும் பயறுவகை பயிர்களில் உயர் விளைச்சல் சாகுபடி […]
அட்மா திட்டத்தில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை – இரசாயன உரங்களின் பயன்பாடுகளை குறைத்தல் குறித்த பயிற்சி

ஈரோடு, ஜூலை 2 ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ், செயல்படும் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை மூலம் இரசாயன உரங்களின் பயன்பாடுகளை குறைத்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது. இது குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ந.சரோஜா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, பவானிசாகர் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ், செயல்படும் வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞரின் […]