தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நீரில் கரையும் உரம் தொடர்பான பயனீட்டாளர்களின் கூட்டம்

கோவை, ஜூன் 24 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நீரில் கரையக்கூடிய உரங்கள் தொடர்பான பயனீட்டாளர்களுக்கான கூட்டம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், முனைவர் வெ.கீதாலட்சுமி, இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் ப.பாலசுப்ரமணியம் வரவேற்புரையாற்றினார். மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் து.செல்வி, தனது அறிமுக உரையில் […]

கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக்குழு – காரீப் பருவ கால பயிற்சி

விருதுநகர், ஜூன் 24 விருதுநகர் வட்டாரம், அட்மா திட்டத்தின்கீழ் கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக்குழு – காரீப்பருவ கால பயிற்சியானது 2024-25ம்ஆண்டு கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கே.புதூர் கிராமத்தில் 24.6.24 அன்று விருதுநகர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர், தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் கே.புதூர் கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர், தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை துறையின் கீழ் […]

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தி்ல் மரக்கன்று தொகுப்பு வழங்கப்பட்டது

விருதுநகர். ஜூன் 22 விருதுநகர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 21.6.24 அன்று நடைபெற்றது. துறை சார்ந்த அனைத்து தலைமை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் கருத்து கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மா இரகங்கள், நெல்லி, சப்போட்டா, பப்பாளி, பலா மற்றும் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனை […]

மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற சோள வகைகள்

சோளம் மக்களின் முக்கிய உணவு தானிய வகைகளில் ஒன்றாகும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது. இந்தியாவில் நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருளாக சோளம் உள்ளது. இதில் அதிகளவில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து. உயிர்சத்துக்கள், தாது உப்புக்களும் மற்றும் கறைந்த அளவில் கொழுப்பும் உள்ளன. சோளப் பயிர் எல்லா மண் வகைகளிலும், தட்ப வெப்ப நிலைகளிலும் நன்றாக வளரும். மக்காச்சோளத்தைவிட வறட்சியைத் தாங்கி வளரும். சோளம் மனித உணவாகவும், முட்டைக்கோழித் தீவனமாகவும், லைசீன் மற்றும் மீத்தியோனின் […]

பூதகுடி கிராமத்தில் காரீப் பருவ விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜூன் 22 மதுரை மாவட்டம், மேற்கு வட்டாரம், வேளாண்மைத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட நிதியின் 2024-25ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பூதகுடி கிராமத்தில் பூதகுடி, கிராம வேளாண் முன்னேற்றக்குழு உறுப்பினர்களுக்கான காரீப் பருவ பயிற்சியானது 22.6.24 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் மதுரை மேற்கு வட்டார வேளாண்மை அலுவலர் ம.கனிமொழி, கலைஞர் திட்டம் குறித்தும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் பற்றியும், […]